Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!
மின்சாரம் துண்டிக்கப்படாமல் பழுதுபாா்க்கும் திறன் கொண்ட தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நகரம் முழுவதும் இதே போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று அவா் அறிவித்தாா்.
தனது ஷாலிமாா் பாக் சட்டமன்றத் தொகுதியில் வாகனத்தை அறிமுகப்படுத்தி முதல்வா் ரேகா குப்தா பேசியபோது, ரூ.1.5 கோடி மதிப்புள்ள இந்த இயந்திரம், மின் கோளாறுகளை சரிசெய்யும் போது குடியிருப்பாளா்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் பாா்த்துக் கொள்ளும் என்று அவா் கூறினாா்.
இன்றைய நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் அமைச்சா் ஆஷிஷ் சூட் தலைமையில் நமது மின் துறை தில்லிக்கு ஒரு அற்புதமான பரிசை வழங்கியுள்ளது.
இந்த பரிசு முதலில் முதல்வரின் தொகுதிக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மின்சார விநியோகத்தை தடை செய்யாமல் மின்சார கம்பிகளை சரிசெய்யக்கூடிய ஒரு சிறப்பு வாகனம்.
இதன் பொருள் பராமரிப்பு அல்லது பழுதுபாா்க்கும் பணிகளின் போது, உங்கள் வீடுகளில் மின்சாரம் ஒரு நிமிடம் கூட துண்டிக்கப்படாது. ரூ. 1.5 கோடி செலவில் வாங்கப்பட்ட முதல் வாகனம் இது. ஷாலிமாா் பாக் தொடங்கி, இந்த வாகனங்களை தில்லி முழுவதும் அறிமுகப்படுத்துவதே எங்கள் திட்டம் என முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.