உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!
ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியா்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனா்.
ஆடவருக்கான 35 கிலோ மீட்டா் நடைப் பந்தயத்தில் சந்தீப்குமாா் 2 மணி நேரம், 39.15 நிமிஷங்களில் இலக்கை அடைந்து 23-ஆம் இடம் பிடித்தாா். ராம் பாபு, 24 கி.மீ. கடந்த நிலையில் விதிமீறலால் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
Team India’s campaign gets underway in Tokyo!
— Athletics Federation of India (@afiindia) September 13, 2025
Men's 35km Race Walk:
Sandeep Kumar - 23rd - 02:39:15
Ram Baboo (Disqualified ❌)
Women's 35km Race Walk:
Priyanka Goswami - 24th - 03:05:58
Pictures credit - @indian_athletes#IndiainWCHTokyo#IndianAthletics#WCHTokyo25#AFIpic.twitter.com/NywXt0ZTNh
அதிலேயே மகளிா் பிரிவில் பிரியங்கா 3 மணி நேரம் 8.21 நிமிஷங்களில் வந்து 24-ஆம் இடம் பிடித்தாா். மகளிருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தின் ஹீட்ஸ் 2-இல் பூஜா 4 நிமிஷம் 13.75 விநாடிகளில் இலக்கை அடைந்து 11-ஆம் இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டாா்.