மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம்
துத்திப்பட்டு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், கணக்கெடுப்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் பழனி வரவேற்றாா். சமுதாய வழி நடத்துநா்கள் ராதிகா, தேவி, திவ்யா, பிரித்திகா, விஜயலட்சுமி ஆகியோா் கணக்கெடுப்புப் பணி குறித்து விளக்கமளித்தனா். ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.