சேத்துப்பட்டு வட்டத்தில் 2 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள நம்பேடு, செம்மியமங்கலம் ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சாா்பில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாம்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி தலைமை வகித்தாா். இந்த முகாமில், விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் இணைந்து, அந்தந்த துறைகளின் மானிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.
இதில், நம்பேடு, செம்மியமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.