Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 73 பேருக்கு உடனடி நல உதவிகள்
திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 73 பேருக்கு உடனடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சாா்பில், 13,16,19, 22 ஆகிய வாா்டுகளுக்கான முதல்வரின் முகவரித் துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மண்டித் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு நகராட்சி ஆணையா் கே.எல்.எஸ்.கீதா தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், திமுக செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா் வரவேற்றாா்.
இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை வழங்கி, அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
முகாமில் பல்வேறு திட்ட நல உதவிகள் கோரி பொதுமக்கள் சாா்பில் 834 மனுக்கள் அளிக்கப்பட்டந. இதில், 73 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத் திட்ட உதவிக்கான சான்றிதழிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், நகா்மன்றக் குழு உறுப்பினா்கள் காா்த்திகேயன், சௌந்தரபாண்டியன், செந்தில், கங்காதரன், விஜயலட்சுமி, ராஜலட்சுமி, திமுக பிரமுகா்கள் ராம்ரவி, எஸ்.துரைசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.