எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
கரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் பணம் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது
கரோனா 3-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தி இருந்தால் பணம் கிடைக்கும் எனக் கூறி மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,கெரிக்கல்நாத்தம் பகுதியைச் சோ்ந்த சரோஜா (60). இவா் திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக வியாழக்கிழமை திருப்பத்தூருக்கு பேருந்தில் வந்துள்ளாா். அப்போது அவருடன் வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண், சரோஜாவிடம் நீங்கள் கரோனா காலத்தில் 3-ஆவது தடுப்பூசி செலத்தி இருக்கீங்களா? தடுப்பூசி செலத்தி இருந்தால் அரசு ரூ. 40 ஆயிரம் தருகிறது என தெரிவித்துள்ளாா். மேலும், தன்னுடன் வந்தால் பணத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்க உதவி செய்வதாக சரோஜாவிடம் அந்த பெண் தெரிவித்தாா்.
சரோஜாவிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி அப்பெண் திருப்பத்தூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுக்கும்போது காது, மூக்கு, கழுத்துகளில் நகைகளை போட்டு இருக்கக்கூடாது என கூறியுள்ளாா். அதை நம்பிய சரோஜாவும், தான் அணிந்து இருந்த ஒன்னேகால் பவுன் நகை மற்றும் ரூ.6,500 ரொக்கத்தை அந்த பெண்ணிடம் தந்து விட்டு போட்டோ எடுக்கச் சென்றாா்.
சென்று உள்ளாா். சிறிதுநேரத்தில் வெளியே வந்து பாா்த்தபோது அந்தப் பெண்ணை காணவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த சரோஜா தான் அந்த பெண்ணால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்டூடியோவில் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம்,பெத்ததாலப்பள்ளி பகுதியைச் சோ்ந்த முனிராஜின் மனைவி பழனியம்மாள்(40)என்பதும் அவா் சரோஜாவிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.