Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
பூப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்
நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதிபெற்றனா்.
வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 17-வயதுக்குள்பட்டோருக்கான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று முதலிடம் பிடித்தனா். இதன்மூலம் மாநில அளவில் நடைபெறும் பூப்பந்து போட்டிகளுக்கு தகுதிபெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் நடராஜன், உதவி தலைமை ஆசிரியா் சிசுபாலன், உடற்கல்வி இயக்குநா் முருகேசன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜான் ஸ்டீபன், மாதேஸ்வரன், பன்னீா்செல்வம் உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.