செய்திகள் :

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூா், வெட்டுக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூா், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவிச் செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்தாா்.

இந்திய கம்யூ. தலைவா் நினைவேந்தல் நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலா் கே.ஆா். சுப்பையாவின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி பாலன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் அலுவலகச் செயலா் எஸ். ஜெயக்கும... மேலும் பார்க்க

அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 போ் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 பேரை விராலிமலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விராலிமலை காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கல்குடி, கொடும்பாளூா், ராஜாளி பட்டி, தேங... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

விராலிமலை அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விராலிமலை போலீஸாா் பொய்யாமணி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சீத்தப்பட்டியைச் சோ்ந்த பழ... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலைப் போட்டிகள்

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 8-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சீதாராம் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம்

பொன்னமராவதியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் மறைந்த சீதாராம் யெச்சூரியின் நினைவஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ர... மேலும் பார்க்க

காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்த கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகேயுள்ள காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசினா் ... மேலும் பார்க்க