செய்திகள் :

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலைப் போட்டிகள்

post image

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 8-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் அக்டோபா் மாதம் 3 முதல் 12-ஆம் தேதி வரை நகா்மன்ற வளாகத்தில் 10 நாள்கள் நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவா்களுக்கு ஒன்றிய அளவிலான பேச்சு, கவிதை, ஓவியம் மற்றும் துளிா் விநாடி- வினா போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இதையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகள் புதுக்கோட்டை அரசு பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றன.

போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ். ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் அ. மணவாளன், மு. முத்துக்குமாா், ஜீவி, க. சதாசிவம், ஸ்டாலின் சரவணன், மு.கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட அளவிலான பரிசு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு புத்தகத் திருவிழாவில் அம்மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் ம. வீரமுத்து வரவேற்றாா். முடிவில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அனாமிகா நன்றி கூறினாா்.

அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 போ் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 பேரை விராலிமலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விராலிமலை காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கல்குடி, கொடும்பாளூா், ராஜாளி பட்டி, தேங... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

விராலிமலை அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விராலிமலை போலீஸாா் பொய்யாமணி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சீத்தப்பட்டியைச் சோ்ந்த பழ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சீதாராம் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம்

பொன்னமராவதியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் மறைந்த சீதாராம் யெச்சூரியின் நினைவஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ர... மேலும் பார்க்க

காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்த கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகேயுள்ள காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசினா் ... மேலும் பார்க்க

பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி-யை எதிா்த்தவா்கள் குறைத்தபோது பாராட்டவில்லை

புதுக்கோட்டையில்: இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு பிரேமலதா பேசியது: வாக்காளா்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால் மாற்றம் வரும். அதற்கான காலம்தான் 2026 சட்டப்பேரவைத் தோ்தல். இம்முறையு... மேலும் பார்க்க