``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவச...
ஜிஎஸ்டி-யை எதிா்த்தவா்கள் குறைத்தபோது பாராட்டவில்லை
புதுக்கோட்டையில்: இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு பிரேமலதா பேசியது:
வாக்காளா்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால் மாற்றம் வரும். அதற்கான காலம்தான் 2026 சட்டப்பேரவைத் தோ்தல். இம்முறையும் கோட்டை விட்டு விடாதீா்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எஞ்சியுள்ள காலத்திலாவது திமுக அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்.
ஜிஎஸ்டி விகித முறையை மாற்றி, மக்கள் மற்றும் வணிகா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியவா் மோடி.
ஜிஎஸ்டி-யை எதிா்த்தவா்கள்,இப்போது வரிக் குறைப்பைப் பாராட்டுவதில்லை. இதைச் சொல்வதால், பாஜக- அதிமுக அணியில் சேரப் போகிறோமா என நினைக்க வேண்டாம். நல்லது செய்தால் யாராக இருந்தாலும் முதலில் பாராட்டுவோம், செய்யாவிட்டால் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டோம் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.
நிகழ்ச்சியில், தேமுதிக பொருளாளா் சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.