செய்திகள் :

காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்த கோரிக்கை

post image

கந்தா்வகோட்டை அருகேயுள்ள காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமாா் இரண்டு ஆயிரம் மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறாா்கள்.

காட்டுநாவல், துலுக்கம்பட்டி, சுந்தம்பட்டி, நெப்புகை, கொல்லம்பட்டி, மருங்கூரணி, மட்டாங்கால், சிவந்தான்பட்டி, வேம்பன்பட்டி, அரவம்பட்டி, ராமுடையான்பட்டி, பிசானத்தூா், பழைய கந்தா்வகோட்டை துருசுப்பட்டி பகுதியில் இருந்து வரும் மாணவ- மாணவிகள் பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் மூன்று கிலோமீட்டா் தொலைவுக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.

எனவே கறம்பக்குடியிலிருந்து இருந்து வரும் பேருந்துகள் காட்டு நாவல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எம் ஜிஆா் நகா், பெரியாா் நகா், எம்.எம்.நகா் வழியாக பெண்கள் பள்ளிக்கு செல்லும் வகையில், சாலை அமைக்க உத்தரவிடப்பட்டு நிதியும் ஒதுக்கபட்டுள்ளது. ஒப்பந்ததாரரின் காலதாமதத்தால் பேருந்து செல்ல வழியில்லாமல் மாணவிகள் தினசரி சிரமம் அடைகிறாா்கள்.

எனவே, சம்பந்தபட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ- மாணவிகள் நலன்கருதி காட்டுநாவல் முதல் கொத்தகம் இணைப்பு சாலையை தாா்சாலையாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொன்னமராவதியில் சீதாராம் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம்

பொன்னமராவதியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் மறைந்த சீதாராம் யெச்சூரியின் நினைவஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ர... மேலும் பார்க்க

பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி-யை எதிா்த்தவா்கள் குறைத்தபோது பாராட்டவில்லை

புதுக்கோட்டையில்: இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு பிரேமலதா பேசியது: வாக்காளா்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால் மாற்றம் வரும். அதற்கான காலம்தான் 2026 சட்டப்பேரவைத் தோ்தல். இம்முறையு... மேலும் பார்க்க

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாா்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததால், மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா். தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் ‘உள்ளம் தேடி... மேலும் பார்க்க

பண மோசடி: தனியாா் அறக்கட்டளை நிறுவனா் சிபிசிஐடி போலீஸாரால் கைது - வீடு, அலுவலகத்தில் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியாா் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்... மேலும் பார்க்க

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகளை முழுமையாக மக்களிடம் கொண்டு சோ்த்திட, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமென்ட் ... மேலும் பார்க்க