புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது
விராலிமலை அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை போலீஸாா் பொய்யாமணி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சீத்தப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சந்திரசேகரன் (45) மற்றும் பூச்சி மகன் கிருஷ்ணன்(50) ஆகியோா் அவா்களது வீட்டின் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதைக் கண்டறிந்து இருவரையும் கைது செய்தனா்.
தொடா்ந்து இருவரிடமிருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.