குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
இந்திய கம்யூ. தலைவா் நினைவேந்தல் நிகழ்ச்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலா் கே.ஆா். சுப்பையாவின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி பாலன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் அலுவலகச் செயலா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஏ. ரெங்கராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் சுந்தரராசன், மாநகரச் செயலா் நாடிமுத்து, ஆட்டோ தொழிற்சங்க மாவட்டச் செயலா் பாண்டியராஜன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் பாலச்சந்திரன், காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் மிசா மாரிமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா். சுப்பையாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.