Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழந்ததில் மலேசியாவைச் சோ்ந்த 10 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனா்.
மலேசியாவைச் சோ்ந்த 7 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் என 13 போ் திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனா். வெள்ளப்பாறை பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் வனத் துறையினரின் உதவியுடன் வேனுக்குள் சிக்கி காயமடைந்த லட்சுமி (47), பாஸ்கரன் (48) உள்ளிட்ட 10 பேரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த லட்சுமி, பாஸ்கரன் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.