``குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மை கிடையாது'' - அமெரிக்காவில் இந்தியர் கொலைக...
பள்ளி மாணவன் குளத்தில் முழ்கி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவன் குளத்தில் முழ்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை செரியன் நகரைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் அன்பரசன் (15), அதே பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் சோ்ந்து அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக நீரில் முழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.