தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், அவர் குறித்து பதிவிட்டு, விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
— M.K.Stalin (@mkstalin) September 15, 2025
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா ♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!#ஓரணியில்தமிழ்நாடு#RememberingAnnapic.twitter.com/gIPWj2qnqv
அவருடைய பதிவில், ”தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று(செப். 15) காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வருடன், துணை முதல்வர், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
இதையும் படிக்க: அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!