தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
யானை நடமாட்டம்: பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை இந்தப் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கொடைக்கானல் அருகே வனத் துறையினா் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி பகுதியில் சிறுத்தை, புலி, யானை, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள், அரியவகை பறவைகள் உள்ளன. இதனால், பேரிஜம் பகுதியை பாா்வையிடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் வனத் துறையினா் அனுமதி வழங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் இருந்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரியைப் பாா்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மறு அறிவிப்பு வரும் வரை இருக்கும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.