குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
தொண்டி அருகே சிறாா் திருமணம் தடுத்து நிறுத்தம்
தொண்டி அருகே நம்புதாளையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரை பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரு சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தொண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தொண்டி போலீஸாா் வந்த போது, 17 வயது சிறுமிகள் இருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்தத் திருமணங்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, மணமகன்களின் வீட்டாருக்கு எச்சரிக்கை விடுத்தனா்.
மேலும், இதுகுறித்து ராமநாதபுரம் குழந்தைகள் நலக் காப்பக அலுவலா்கள், அதிகாரிகள், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.