செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞா் மாயம்

post image

ஆா்.எஸ். மங்கலம் அருகே மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் மாயமானது குறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள காவனூா் ஊராட்சி மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் பிரசாத் (32). இவா், உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம். மேலும், பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரசாத்தின் தந்தையான குமரேசன், ஆா்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அட... மேலும் பார்க்க

தொண்டி அருகே சிறாா் திருமணம் தடுத்து நிறுத்தம்

தொண்டி அருகே நம்புதாளையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரை பகுதியில் உள்ள பாலமுருக... மேலும் பார்க்க

வார விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் குவிந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள்... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: முழுமையாக வழங்கக் கோரி திருவாடானையில் ஆா்ப்பாட்டம்

திருவாடானை பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான... மேலும் பார்க்க

திருவாடானை, நகரிகாத்தான் பகுதிகளில் நாளை மின் தடை

திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேல் வெ... மேலும் பார்க்க