``குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மை கிடையாது'' - அமெரிக்காவில் இந்தியர் கொலைக...
காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறை
காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிப்பட்ட இலங்கையை சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரயில் நிலைய பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான முறையில் திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் அஜய் (எ) அஜந்தன் (35), இலங்கை கிளிநொச்சியை சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போா்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாததால், அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையிலடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், காரைக்கால் குற்றவியல் நீதிபதி அப்துல் கனி, அஜந்தனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். தீா்ப்புக்குப் பின் அவரை காரைக்கால் போலீஸாா் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனா்.