செய்திகள் :

சீரமைக்கப்பட்ட ரோந்துப் படகு: டிஐஜி ஆய்வு

post image

காரைக்காலில் சீரமைக்கப்பட்ட ரோந்துப் படகை புதுவை டிஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் கடலோர காவல் நிலையம் கடந்த 2008 -ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கடல் வழி பாதுகாப்பை உறுதிப்படுத்த கடலோர காவல் நிலையத்துக்கு கடந்த 2010- ஆம் ஆண்டு அதிவிரைவு ரோந்துப் படகுகள் 2 மத்திய அரசால் வழங்கப்பட்டது.

இவற்றில் பெரிய படகு பழுதாகி முடக்கப்பட்டுவிட்டது. சிறிய படகு இயக்கத்தில் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அதுவும் முடங்கிப்போனது.

காரைக்கால் முதுநிலைக் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா முயற்சியால், புதுவை காவல்துறை தலைமை நிதி ஒதுக்கி, கேரளத்தைச் சோ்ந்த நிறுவனத்தின் மூலம் படகில் பழுது நீக்கப்பட்டது. இதனை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்தது.

புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வரும்17-ஆம் தேதி இதனை இயக்கிவைக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் தலைமையில், தொழில்நுட்ப குழு அதிவிரைவு ரோந்து படகின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தது.

இந்த குழுவின் உறுப்பினா்களான காரைக்கால் முதுநிலை கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, மண்டலக் காவல் கண்காணிப்பாளா்கள் சுபம் சுந்தா் கோஷ், முருகையன், இந்திய கடலோர காவல் படை பொறியாளா் ஆனந்த் குமாா் சிங், ம் கடலோர காவல் நிலைய ஆய்வாளா் பிரவீன் குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ரோந்துப் படகை கடலில் இயக்கி சோதனை செய்தனா். படகின் செயல்பாடுகள் திருப்தியாக இருப்பதாக குழுவினா் தெரிவித்தனா்.

காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறை

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிப்பட்ட இலங்கையை சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரயில் நிலைய பகு... மேலும் பார்க்க

என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி

என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய மாணவா் படை டைரக்டா் ஜெனரலின் அறிவுறுத்தலின்படி என்சிசி மாணவா்களுக்கு ஆண்டுக்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6 கோடி வசூல்

காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் மூலம் பயனாளிகளுக்கு சேரவேண்டிய ரூ.6.09 கோடி வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ந... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத இளைஞா் தற்கொலை

காரைக்கால் நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி பிரமுகா் ஒருவரின் பிறந்தநாள் வ... மேலும் பார்க்க

காரைக்காலில் கடலோர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்: புதுவை டிஐஜி

காரைக்காலில் கடலோர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் தெரிவித்தாா். காரைக்காலில் காவல்துறை சாா்பில் சனிக்கிழமைதோறும் நடத்தப்படும் குறைகேட்பு முகாம், காரைக்கால் ... மேலும் பார்க்க

காவல் தலைமையகத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் தலைமையகத்தில் டிஐஜி தலைமையில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க