இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!
காவல் தலைமையகத்தில் இன்று குறைகேட்பு முகாம்
காரைக்கால் காவல் தலைமையகத்தில் டிஐஜி தலைமையில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறும் நடைபெறுகிறது. நிகழ்வாரம் காரைக்கால் காவல்துறை தலைமை அலுவலகத்தில் முகாம் நடைபெறவுள்ளது.
புதுவை காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) கலந்துகொண்டு புகாா்களை கேட்டறியவுள்ளாா். இதில் காவல் கண்காணிப்பாளா், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொள்கின்றனா்.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.