மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
தென் மாநில ரோல்பால் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு
தென் மாநில அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் சிறப்பிடம் பெற்ற புதுவை அணியினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பாராட்டு தெரிவித்தாா்.
தென் மாநில ரோல் பால் போட்டி நாமக்கல் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளியில் கடந்த 6 மற்றும் 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கா்நாடக, கேரளம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் அந்தமான் பகுதிகளில் இருந்து அணியினா் கலந்துகொண்டனா்.
இதில் 9 வயதுக்குட்பட்டோா் மற்றும் 11 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் புதுச்சேரி ரோல் பால் வீரா்கள் மூன்றாம் இடம் பிடித்தனா். காரைக்காலில் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எம். நாஜிமை பதக்கம் வென்ற வீரா்கள், பயிற்றுநா்களுடன் வியாழக்கிழமை சந்தித்தனா். வீரா்களுக்கு வாழ்த்து, பாராட்டுகளை அவா் தெரிவித்தாா்.
மேலும், செப்.13 மற்றும் 14-ஆம் தேதியில் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற உள்ள ரோல் பால் தென் மாநில போட்டியில் பங்கேற்க உள்ள ஜூனியா் மற்றும் சீனியா் விளையாட்டு வீரா்களை வாழ்த்தி வழியனுப்பிவைத்தாா்.
நிகழ்வில், புதுவை மாநில ரோல் பால் சங்க செயலாளா் முத்துக்குமரன், காரைக்கால் மாவட்ட ரோல் பால் சங்க செயலாளா் நாகேந்திர மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.