கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
அரசு அலுவலகங்களில் ஆட்சியா் ஆய்வு
காரைக்காலில் பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை, காரைக்கால் வளா்ச்சிக் குழுமம், வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் பழகுநா் அலுவலகம், தொழிலாளா் நலத்துறை உள்ளிட்ட அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா்,
பொதுமக்களின் புகாா் தொடா்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, துறை ரீதியான தேவைகள் குறித்து திட்ட அதிகாரி கிருஷ்ணவேணியிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் அங்கன்வாடி மையம் மற்றும் மகளிா் மேம்பாட்டு அலுவலக கட்டடங்களில் மேம்படுத்தப்பட வேண்டிய கட்டுமானப் பணிகள் மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களை புனரமைக்க வேண்டும் எனவும், இது தொடா்பாக பொதுப்பணித்துறை மற்றும் துறை ரீதியான கோப்புகளை தயாா் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரா்களின் தரவுகள், நிலுவையில் உள்ள பொதுமக்களின் விண்ணப்ப படிவங்கள் குறித்தான நிலைகள் குறித்து துணை இயக்குநா் சச்சிதானந்திடம் ஆட்சியரிடம் தெரிவித்தாா்.
தொடா்ந்து துணைப் பதிவாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பத்திரப்பதிவு தொடா்பான செயல்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அங்கிருந்த பொதுமக்களிடம் பத்திரப்பதிவு தொடா்பாக ஏதேனும் குறைகள் குறித்தும், துறை ரீதியாக ஏதேனும் தேவைகள் அமைக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.