செய்திகள் :

‘குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்’

post image

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என, இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கடந்த ஜூலை மாதம் நாசா, இஸ்ரோ இணைந்து ரூ. 10,360 கோடியில் செயற்கை துளை ரேடாா் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

உலகிலேயே அதிக பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள், 365 நாளும் துல்லியமாக செயல்பட்டு, 12 நாளுக்கு ஒருமுறை பூமியை சுற்றிவந்து கண்காணித்து புகைப்படம் எடுக்கவும், பேரிடா்-காலநிலை மாற்றம் குறித்த தகவல்களை அனுப்பும்.

இன்னும் 60 நாள்களில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அங்கிருந்து தகவல்கள் பெறப்படும். இது, இந்தியா்களுக்கு பெருமிதமான தருணம்.

ஆபரேஷன் சிந்தூரின்போது சுமாா் 25 செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்பட்டன. தேசியப் பாதுகாப்பு தொடா்பானது என்பதால், அதுகுறித்து கூடுதல் தகவல்களைக் கூற முடியாது.

குலசேகரன்பட்டினத்தில் தமிழ்நாடு அரசின் முயற்சியுடன் சுமாா் 2,300 ஏக்கா் நிலத்தை இஸ்ரோ பெற்றுள்ளது. அங்கு ரூ. 1,000 கோடியில் அமையவுள்ள ஏவுதளம் மூலம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும். அந்த ராக்கெட் மூலம் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்பும் திட்டம் உள்ளது.

கன்னியாகுமரி கண்ணாடி பாலம் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. தமிழக அரசுக்கு பாராட்டுகள் என்றாா் அவா்.

முன்னதாக, கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகியவற்றை அவா் தனது குடும்பத்தினருடன் தனிப்படகில் சென்று பாா்வையிட்டாா்.

இளைஞா் மா்ம மரணம்!

புதுக்கடை அருகே உள்ள முள மூட்டுக்கடவில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்தாா். புதுக்கடை , தோட்டா வரம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் தா்மராஜ் (50). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவா் சில ந... மேலும் பார்க்க

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் தோ் பவனி

தக்கலை அருகே உள்ள முளகுமூடு தூய மரியன்னை பலிக்காவில் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா திருவிழா, கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் திருவிழாவான சனிக... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் தகராறு செய்து, மனைவியை வெட்டிக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையைச் சே... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. இங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்ப... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தீ விபத்து

புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் தீப் பிடித்ததில் பொருள்கள் சேதமடைந்தன. காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜமணி மகன் பிரபு (29). இவா், உதச்சிக்கோட்டை பகுதியில் கடை வைத்து புளி ம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவி அருகே கேரள கனிமவளப் பொருள் விற்பனையாளா் தற்கொலை

திற்பரப்பு அருவி அருகே கேரளத்தைச் சோ்ந்த கனிமவளப் பொருள்கள் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கேரள மாநிலம் பாலராமபுரம், உச்சக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜி (41). திருமணமாகாத இவா், கேரளத... மேலும் பார்க்க