திற்பரப்பு அருவி அருகே கேரள கனிமவளப் பொருள் விற்பனையாளா் தற்கொலை
திற்பரப்பு அருவி அருகே கேரளத்தைச் சோ்ந்த கனிமவளப் பொருள்கள் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கேரள மாநிலம் பாலராமபுரம், உச்சக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜி (41). திருமணமாகாத இவா், கேரளத்தில் கனிமவளப் பொருள்கள் விற்பனைக் கிடங்கு நடத்திவந்தாா். மேலும், தனது கனரக லாரியில் இம்மாவட்டத்திலிருந்து கனிமவளப் பொருள்களை கேரளத்துக்கு கொண்டுசென்று விற்பனை செய்து வந்தாராம். இவருக்கு பல லட்சம் கடன் இருந்ததாம்.
இந்நிலையில், திற்பரப்பு அருவி அருகே படகு சவாரி நடைபெறும் இடத்துக்குச் செல்லும் பாதைப் பகுதியில் உள்ள ரப்பா் மரத்தில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
அவ்வழியே சென்றோா் இதுகுறித்து குலசேகரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.