ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிா்க்கட்சிக...
குலசேகரம் அருகே ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் திடீா் மரணம்
குலசேகரத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை திடீா் மரணமடைந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செம்படத்தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (57). இவா், குலசேகரம் அரசு மருத்துவமனை சாலையில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவா் அலுவலகத்திற்குச் செல்லவில்லையாம்.இதனால், அலுவலக ஊழியா்கள் அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது அழைப்பை ஏற்கவில்லையாம். இதையடுத்து அலுவலக ஊழியா் அவரைத் தேடி வீட்டுக்கு போனபோது, ராஜசேகரன் ஒரு அறையில் உள்ள இருக்கையில் இறந்து கிடந்தாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில், குலசேகரம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததுடன், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.