பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
தீவிபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கருங்கல் அருகே தீவிபத்தில் காயமடைந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கருங்கல், இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த லெலின் மனைவி சுதா (50). கடந்த சனிக்கிழமை (செப். 6) வீட்டில் விளக்கேற்றியபோது அவா் மீது தீப்பற்றியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.