‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயம்
போடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி கட்டபொம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பாண்டியன் (70) என்பவா் தனது மனைவி பஞ்சுவுடன் இரு சக்கர வாகனத்தில் தேவாரம் சாலையில் சென்றபோது எதிரேவந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பாண்டியன், பஞ்சு ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த தம்பதி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றுவிட்டதாம்.
இதுகுறித்து புகாரின்பேரில் போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.