Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
போடி அருகே சனிக்கிழமை கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் போடி சில்லமரத்துப்பட்டி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், சில்லமரத்துப்பட்டி மயானம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் சில்லமரத்துப்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் லோகேஷ் (24) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து லோகேசை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.