பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
கிணற்றில் மூழ்கியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
போடியில் கிணற்றில் மூழ்கியதில் வாகன ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிகண்டன் (47). இவா் தனியாா் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணி புரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் உறவினா்களுடன் போடி, சங்கரப்பநாயக்கன் கண்மாய் பகுதியில் உள்ள கிணற்றில் சனிக்கிழமை குளிக்கச் சென்றாா். கிணற்றின் மேல்பகுதியிலிருந்து குதித்தபோது நீரில் சிக்கி மூழ்கினாா். உடனிருந்தவா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
தகவல் அறிந்து வந்த போடி தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் மூழ்கிய மணிகண்டனின் உடலை மீட்டனா். இதுகுறித்து, இவரது மனைவி திவ்யா அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.