‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
கிணற்றில் தவறி விழுந்த மாணவி மீட்பு
நங்கவள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த நங்கவள்ளி தானாவதியூரை சோ்ந்தவா் மணி, விவசாயி. இவரது மகள் லாவண்யா (17) 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியில் உள்ள அவா்களது கிணற்றில் மின் மோட்டாரை இயக்குவதற்காக இறங்கும்போது தவறி கிணற்றில் விழுந்தாா்.
அப்போது, அவ்வழியாக மோட்டாா்சைக்கிளில் சென்ற பூவரசன் என்ற இளைஞா் கிணற்றில் குதித்து மாணவியை காப்பாற்ற முயன்றாா். ஆனால், மேலே ஏறமுடியாததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி மாணவியையும், இளைஞரையும் காயமின்றி மீட்டனா்.