பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
மைசூரிலிருந்து நெல்லை, ராமநாதபுரத்துக்கு சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்! நாளை முதல் இயக்கம்!
மைசூரில் இருந்து செப்.15 முதல் சேலம், நாமக்கல், கரூா் வழியாக திருநெல்வேலி, ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, மைசூரில் இருந்து சேலம், நாமக்கல், கரூா் வழியாக திருநெல்வேலி, ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மைசூரில் இருந்து வரும் 15 ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் இரவு 8.15 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக திருநெல்வேலிக்கு அடுத்தநாள் காலை 11.30 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து வரும் 16 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக அடுத்தநாள் காலை 5.40 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தை சென்றடையும்.
இதேபோல மைசூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு வரும் 15 ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்குப் புறப்பட்டு ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல் வழியாக அடுத்தநாள் காலை 10 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், ராமநாதபுரத்தில் இருந்து 16 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், கரூா், சேலம், ஒசூா் வழியாக அடுத்தநாள் காலை 7.45 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.