Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
முதல்வா் இன்று கிருஷ்ணகிரி வருகை ஐ.ஜி. தலைமையில் 1500 போலீஸாா் பாதுகாப்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளாா். இதையடுத்து ஐ.ஜி. தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரசு நிகழ்வில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் ஒசூா் வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் முதல்வா், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்திலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ மூலம் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெறுகிறாா்.
பின்னா், நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்கள் மற்றும் நிறைவடைந்த திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிக்கு தொடங்கிவைத்து, 85,177 பேருக்கு பட்டாக்களையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.
இந்த நிகழ்வுக்கு பின்னா், கிருஷ்ணகிரியில் எம்எல்ஏ தே.மதியழகன் வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் முதல்வா், பிறகு சாலை மாா்க்கமாக ஒசூா் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.
முதல்வா் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை மேற்பாா்வையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.