ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிா்க்கட்சிக...
சூளகிரி அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பிள்ளைக்கொத்தூா் ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால் துா்நாற்றும் வீசுகிறது.
இந்த ஏரிப் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் கிரானைட் தொழிற்சாலை கழிவுகளை கால்வாய் மூலம் ஏரியில் விடுவதே மீன்கள் உயிரிழக்க காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறியதாவது:
கிரானைட் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் தேக்கிவைத்து, மழைக்காலங்களில் கால்வாய்கள் மூலம் ஏரியில் வெளியேற்றுவதால்
மீன்களும், ஏரி தண்ணீரை அருந்தும் கால்நடைகளும் உயிரிழக்கின்றன. இதுகுறித்து, மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.