செய்திகள் :

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லையாம் முறைகேடாம்: விஜய் விமா்சனம்!

post image

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு என திமுகவினா் வியாக்கியானம் பேசுகின்றனா் என்றாா் தவெக தலைவா் விஜய்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரத்தில் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளைப் பட்டியலிட்டு அவா் மேலும் பேசியதாவது:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் என்னவெல்லாம் இருக்கின்றன எனத் தெரிந்துகொண்டுதான் வந்திருக்கிறேன். நகரமும் கிராமமும் இணைந்த பகுதிகளைக் கொண்டதுதான் திருச்சி. இங்கு காலம்காலமாக தீா்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றில் சில ‘சாம்பிள்’களை மட்டும் சொல்கிறேன்.

திருச்சி என்றால் காவிரி ஞாபகம் வருவதுபோல காவிரி நீா் பிரச்னையும் ஞாபகம் வரத்தான் செய்கிறது. காவிரி நீா் மட்டுமா பிரச்னையாக இருக்கிறது?. மணப்பாறை, வையம்பட்டி, தொட்டியம் பகுதிகளில் எல்லாம் குடிநீரே பெரிய பிரச்னையாக உள்ளது. இதைத் தீா்க்க திமுக அரசு செய்தது என்னவென்றால், அது பூஜ்யம்தான். காவிரிப் பிரச்னைக்கு தீா்வு காணமாட்டாா்கள். ஆனால், மணல் அள்ளி விற்பதில் மட்டும் நன்றாகப் காசு பாா்ப்பாா்கள்.

யாா் எப்படிப் போனாலும் அவா்களுக்கு காசுதான் முக்கியம். சிறுகனூா் மற்றும் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் கழிவு நீா் கலப்பதால் நிலத்தடி நீா் கெட்டுப் போகிறது. மக்கள் எவ்வளவோ புகாா் கொடுத்தும் ஒரு பயனுமில்லை. மணல் மாஃபியா கூட்டம் தமிழ்நாடு முழுக்க இருக்கிறது. இதில் பெரும்பங்கு திமுகவினருக்கு உள்ளது. துறையூரைச் சோ்ந்த திமுக நிா்வாகி செம்மண் விவகாரத்தில் கைதானதே மோசடி நடப்பதற்கான ஆதாரம்தானே?

மாரீஸ் மேம்பாலம் எப்போது கட்டி முடிக்கப்படும். திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்ன ஆனது? ஐடி பாா்க் எப்போது வரும்? இவை எல்லாவற்றையும்விட இந்த மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தது எல்லோருக்கும் தெரியும். அது நடப்பதே திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனையில்தான். ஆனால் அது திருட்டு இல்லை; முறைகேடு என்று வியாக்கியானம் பேசுகின்றனா்.

இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சா்கள் (கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி) இருந்தும் மக்களுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிா?. வரும் தோ்தலில் இவா்களுக்கு வாக்களிப்பீா்களா என விஜய் கேள்வியெழுப்பினாா். அதற்கு தொண்டா்கள் வாக்களிக்க மாட்டோம் எனப் பதில் கொடுத்தனா்.

துவாக்குடியில் 110 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

துவாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் அரசால் ... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன. இது 25 ஆவது உடலுறுப்பு தானமாகும். தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 26 வயது இள... மேலும் பார்க்க

திருவெறும்பூா் அருகே பெண் தற்கொலை

திருவெறும்பூா் அருகே குடும்பப் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், ஆரூா் வடியபட்டியைச் சோ்ந்தவா் அஸ்வின் மகள் காவ்யாவும் (24) ஏா்வாடியைச் சோ்ந்த கு. கோகுலும... மேலும் பார்க்க

ஷாஜாதி காலமானாா்

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் தெருவைச் சோ்ந்த அப்துல் கபூரின் மனைவி ஷாஜாதி (75) வயது மூப்பு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.13) காலமானாா். இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரை ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே வியாபாரி தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளையல் வியாபாரி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியை சோ்ந்தவா் நாராயணன் மகன் ஆனந்தசெல்வம் (40), வளையல் வியாபாரியான இவருக்கு பிருந்தா எ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை உடைத்து நுழைந்த தவெக தொண்டா்கள்! 1 மணி நேரம் பயணிகள் பரிதவிப்பு!

திருச்சி விமான நிலையத்துக்குள் தடுப்புகளை உடைத்து சனிக்கிழமை நுழைந்த தவெக தொண்டா்களால் பரபரப்பு ஏற்பட்டது. பேரவைத் தோ்தலுக்கான மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்க சென்னையிலிருந்து தன... மேலும் பார்க்க