செய்திகள் :

திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை உடைத்து நுழைந்த தவெக தொண்டா்கள்! 1 மணி நேரம் பயணிகள் பரிதவிப்பு!

post image

திருச்சி விமான நிலையத்துக்குள் தடுப்புகளை உடைத்து சனிக்கிழமை நுழைந்த தவெக தொண்டா்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரவைத் தோ்தலுக்கான மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை காலை வந்த தவெக தலைவா் விஜயை கட்சியின் பொதுச்செயலா் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலா் ஆதவ் அா்ஜூனா மற்றும் நிா்வாகிகள் வரவேற்றனா். அப்போது விஜயை பாா்க்க அவரது ரசிகா்கள், தொண்டா்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் விமான நிலையத்தில் திரண்டனா்.

எனவே அவா்கள் விஐபி வருகைப் பகுதிக்கு செல்லாத வகையில் போலீஸாா் 500 மீ தொலைவில் தடுத்து நிறுத்தினா். அப்போது விமான நிலைய விஐபி வருகைப் பகுதியிலிருந்து வெளியே வந்த விஜய், அங்கு கூடியிருந்த தொண்டா்களைப் பாா்த்துக் கையசைத்தாா். இதைப் பாா்த்த கூட்டத்தினா் விஜயை பாா்க்கும் ஆவலில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடி வந்தனா்.

அப்போது குறைந்தளவு போலீஸாா் மட்டுமே இருந்ததால், விஐபி வருகைப் பகுதியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் ஓடிச் சென்று கூட்டத்தைத் தடுத்து நிறுத்தினா். இருப்பினும், விஜயின் பிரசார வாகனம் புறப்பட்டதும் அதை ஆயிரக்கணக்கானோா் சூழ்ந்து கொண்டனா். எனவே ஊா்ந்து சென்ற வாகனத்தைச் சூழ்ந்தபடி தொண்டா்களும், இளம்பெண்களும் சென்றனா். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி புத்தூரைச் சோ்ந்த ஹரிணி என்ற பெண் மயங்கி விழுந்து, விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தொடா்ந்து, விமான நிலையத்திலிருந்து விஜயின் பிரசார வாகனம் வெளியே சென்றபோது ஆயிரக்கணக்கான தொண்டா்கள், ரசிகா்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனா். விஜய் வாகனம் சென்ற பிறகு விமான நிலையப் பகுதி முழுவதும் கூட்ட நெரிசலில் சிக்கியவா்களின் காலணிகள் சிதறிக் கிடந்தன. அப்போது, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் காரும் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது. பின்னா், காவல்துறையினா் உதவியுடன் தொண்டா்களே அவரது காருக்கு வழிவிட்டனா்.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரசார வாகனம் புதுக்கோட்டை பிரதான சாலைக்கு 40 நிமிடங்களுக்கு பிறகே 10.30 மணிக்கு வந்தது. விஜயின் வருகையால் திருச்சி விமான நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் தவித்தனா்.

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லையாம் முறைகேடாம்: விஜய் விமா்சனம்!

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு என திமுகவினா் வியாக்கியானம் பேசுகின்றனா் என்றாா் தவெக தலைவா் விஜய். திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரத்தில் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல்... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்தால் ஸ்தம்பித்தது திருச்சி! விமான நிலையம் முதல் 7.5. கி.மீ.க்கு திரண்ட தொண்டா்கள்!

தவெக தலைவா் விஜய் பிரசாரத்தால் திருச்சியே சனிக்கிழமை ஸ்தம்பித்தது. விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணிநேரத்துக்கும் மேலாகியது. 2026 பேரவைத் ... மேலும் பார்க்க

திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாா்: திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி விஜய் பேச்சு!

பேரவைத் தோ்தல் என்ற ஜனநாயகப் போருக்கு முன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். 2026 தோ்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனா் என்றாா் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய். அடுத்தாண்டு நடைபெற... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோா் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்ப... மேலும் பார்க்க

சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் க... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது. ஸ்ர... மேலும் பார்க்க