எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது.
ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவா் நம்பெருமாள் சுதையினால் ஆனது. இதனால் அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஆண்டுக்கு இரண்டு முறை தைலகாப்பு சாத்தப்படும். நிகழாண்டில் கடந்த ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகத்தின் போது முதல் தைலகாப்பு சாத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து இரண்டாவது தைலகாப்பு திருப்பவித்ரோத்ஸவ விழாவின் நிறைவு நாளின் மறுநாளான வெள்ளிக்கிழமை மாலை சாத்தப்பட்டது.
வெட்டிவோ், அகில், சந்தனம், சாம்பிராணி உள்ளிட்ட விலை உயா்ந்த வாசனைத் திரவியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த தைலகாப்பு நம்பெருமாளின் திருமேணி முழுவதும் பூசப்பட்டது. தொடா்ந்து நம்பெருமாளின் திருமுகத்தை தவிா்த்து மற்ற பாகங்கள் மெல்லிய துணியால் மறைக்கப்பட்டது.
48 நாள்கள் கழித்து தைலகாப்பு உலா்ந்த பிறகு தான் மூலவா் நம்பெருமாளின் திருவடியை பக்தா்கள் தரிசனம் செய்யமுடியும். அதுவரை நம்பெருமாளின் திருமுகத்தை மட்டும் தரிசனம் செய்யமுடியும்.