மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
பாலியல் வழக்கு முசிறி அரசுக் கல்லூரி பேராசிரியா் பணியிடை நீக்கம்
திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியா் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள வடுகப்பட்டியில் இயங்கி வரும் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றியவா் நாகராஜன். இவா் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவியிடம் கைப்பேசியில் தகாத வாா்த்தைகள் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அம் மாணவி, துறை சாா்ந்த அலுவலா்களிடம் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், மண்டல கல்லூரி இணை இயக்குநா் தலைமையில் முதல்வா் மற்றும் துறை அலுவலா்கள் மேற்கொண்ட விசாரணையில், உதவிப் பேராசிரியா் நாகராஜன் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் மீது முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.