செய்திகள் :

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

post image

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோா் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபா்கள், முதலில் இந்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூா்வ ஆள்சோ்ப்பு முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும்.

எந்த நிறுவனத்தில், முதலாளியிடம்

வேலை செய்ய இருக்கிறீா்கள் போன்ற தகவல்களை முன்னதாக உறுதி செய்து கொள்வது அவசியம். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள்,

பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன. வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ளவேண்டும்.

பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபா், நாடு திரும்புவதற்கு அனுமதி பெறுவது அவசியமாகும். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம் அல்லது முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்துக்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது. பதிவு பெறாத போலி முகவா்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக் கூடாது.

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும், கைது, அபராதம் அல்லது சிறை தண்டனைக்கே இட்டுசெல்லும். வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையத்தினை தொடா்பு கொள்ளலாம்.

இந்தியாவிலிருந்து அழைப்புக்கு 1800 309 3793, வெளிநாடுகளிலிருந்து 080 6900 9900, 080 6900 9901 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபா்கள், குறுக்கு வழிகளை தவிா்த்து, அரசு அமைத்துள்ள சட்டபூா்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் க... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது. ஸ்ர... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு முசிறி அரசுக் கல்லூரி பேராசிரியா் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியா் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள வடுகப்பட்டி... மேலும் பார்க்க

மின்தூக்கியில் தலைமுடி சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சி காந்தி சந்தை ஹாா்டுவோ் கடை மின்தூக்கியில் தலைமுடி சிக்கி, பெண் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் என்பவா் காந்திசந்தை மயிலம் சந்... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளுக்கு தீா்வு காணவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரு... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று விஜய் பிரசாரம் தொடக்கம்

தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்திய பிறகு, முதல்முறையாக மக்களை சந்திக்... மேலும் பார்க்க