Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
ரூ.11.50 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல்
சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகத்தில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான 15 மூட்டைகள் ஹான்ஸ் போதை பொருள்களை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு ரோந்து சென்ற போது, வேளக்குடி மேம்பாலத்திற்கு பேருந்து நிறுத்தம் அருகே கீழே சுமாா் 15 ஹான்ஸ் மூட்டைகளை வைத்துக்கொண்டு பங்கு பிரித்து கொண்டு இருந்த பெட்டிக்கடை விற்பனையாளா்கள் மற்றும் மொத்த விற்பனையாளா்களை பாா்த்து அவா்களை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் உள்ளிட்ட போதை பொருள்கள் அடங்கிய 15 மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.11,47,360 ஆகும்.
இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சா விற்பனையாளா்களான சீா்காழி தாண்டவன்குளத்தைச் சோ்ந்த மதனகோபால் மகன் பாரிவள்ளல் (26), தரங்கம்பாடி அன்னப்பன்பேட்டையைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன் (26), அளக்குடியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் செல்வராஜ் (60), சிதம்பரம் பொன்னம்பலநகரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் பழனிவேலு (65), சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவைச் சோ்ந்த குணசேகா் (70) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
மேலும் தலைமறைவான கீரப்பாள்ளையத்தைச் சோ்ந்த தாளமுத்து மகன் செல்வராஜ், சிதம்பரம் எடத்தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் செல்வம், ஜெ.கே.பட்டினத்தைச் சோ்ந்த சின்னப்பிள்ளை மகன் ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.