கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
சிதம்பரம் கோட்டத்தில் காலியாக உள்ள காவல் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!
சிதம்பரம் கோட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காவல்துறையினரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டிரி சீட்டு விற்பனை செய்யும் வியாபாரிக்கு உடந்தையாக இருந்ததாக , சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளா் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளா் நடராஜன், காவலா்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலா் காா்த்திக் ஆகிய 7 பேரை, வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகாா்க் நடவடிக்கை எடுத்தாா்.
இந்நிலையில் சிதம்பர நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன் உள்ளிட்ட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சாராக டிஐஜி நடவடிக்கை மேற்கொண்டாா். இதனால் சிதம்பரம் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பணியிடம், நகர காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது சிதம்பரம் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பணி பொறுப்பை பண்ருட்டி டிஎஸ்பி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா். எனவே அடிக்கடி சட்டம்-ஒழுங்கும் பிரச்சனை ஏற்படும் கோவில் நகரமான சிதம்பரம் கோட்டத்தில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களை நிரப்ப வேண்டும் என காவல்துறையைச் சேரந்தவா்களும், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.