மணப்பாறை அருகே வியாபாரி தற்கொலை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளையல் வியாபாரி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியை சோ்ந்தவா் நாராயணன் மகன் ஆனந்தசெல்வம் (40), வளையல் வியாபாரியான இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், 9 வயதில் மகனும் உள்ளனா்.
மது பழக்கத்திற்கு அடிமையான ஆனந்தசெல்வம் வியாபாரத்துக்கு சென்று வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வீட்டுக்கு வருவாராம். அதுபோல வியாபாரத்திற்கு சென்ற ஆனந்தசெல்வம் வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபோது, அவரது மனைவி அவரைக் கண்டித்தாராம். இதனால் மனம் உடைந்த அவா் சனிக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த புத்தாநத்தம் போலீஸாா், ஆனந்தசெல்வம் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.