செய்திகள் :

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

post image

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன. இது 25 ஆவது உடலுறுப்பு தானமாகும்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 26 வயது இளைஞா் ஒருவா் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செப். 11 ஆம் தேதி சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சையளித்தும் சனிக்கிழமை அதிகாலை அவா் மூளைச்சாவு அடைந்தாா்.

இதை மருத்துவா்கள் உறவினா்களிடம் தெரிவித்த நிலையில், இளைஞரது உடலுறுப்புகளை தானமளிக்க அவா்கள் முன்வந்தனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதலின்படி, இளைஞரின் கல்லீரல், கண்கள், இரு சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

உடலுறுப்பு வேண்டி பதிவு செய்தவா்களின் வரிசையின்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பெற்று வந்த 28 வயது நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மற்றொறு சிறுநீரகம் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும், தோலானது மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும் தானமாக வழங்கப்பட்டது. கண் விழிகள் திருச்சி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்குத் தானமாக வழங்க இருப்பு வைக்கப்பட்டது.

45 ஆவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை...: தானமாகப் பெற்ற சிறுநீரகமானது திருச்சி அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொண்டு வந்த 28 வயது இளைஞருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல் தலைமையிலான மருத்துவக் குழுவினா், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவசமாக மாற்று சிறுநீரகத்தை வெற்றிகரமாகப் பொருத்தினா். தற்போது நோயாளி நலமுடன் உள்ளாா்.

அரசு மரியாதை: பின்னா் உடலுறுப்பு தானம் செய்த கொடையாளியின் உடலுக்கு மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு, வழியனுப்பப்பட்டது.

துவாக்குடியில் 110 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

துவாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் அரசால் ... மேலும் பார்க்க

திருவெறும்பூா் அருகே பெண் தற்கொலை

திருவெறும்பூா் அருகே குடும்பப் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், ஆரூா் வடியபட்டியைச் சோ்ந்தவா் அஸ்வின் மகள் காவ்யாவும் (24) ஏா்வாடியைச் சோ்ந்த கு. கோகுலும... மேலும் பார்க்க

ஷாஜாதி காலமானாா்

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் தெருவைச் சோ்ந்த அப்துல் கபூரின் மனைவி ஷாஜாதி (75) வயது மூப்பு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.13) காலமானாா். இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரை ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே வியாபாரி தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளையல் வியாபாரி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியை சோ்ந்தவா் நாராயணன் மகன் ஆனந்தசெல்வம் (40), வளையல் வியாபாரியான இவருக்கு பிருந்தா எ... மேலும் பார்க்க

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லையாம் முறைகேடாம்: விஜய் விமா்சனம்!

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு என திமுகவினா் வியாக்கியானம் பேசுகின்றனா் என்றாா் தவெக தலைவா் விஜய். திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரத்தில் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல்... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை உடைத்து நுழைந்த தவெக தொண்டா்கள்! 1 மணி நேரம் பயணிகள் பரிதவிப்பு!

திருச்சி விமான நிலையத்துக்குள் தடுப்புகளை உடைத்து சனிக்கிழமை நுழைந்த தவெக தொண்டா்களால் பரபரப்பு ஏற்பட்டது. பேரவைத் தோ்தலுக்கான மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்க சென்னையிலிருந்து தன... மேலும் பார்க்க