திருவெறும்பூா் அருகே பெண் தற்கொலை
திருவெறும்பூா் அருகே குடும்பப் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், ஆரூா் வடியபட்டியைச் சோ்ந்தவா் அஸ்வின் மகள் காவ்யாவும் (24) ஏா்வாடியைச் சோ்ந்த கு. கோகுலும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து, திருவெறும்பூா் அருகே குண்டூா் ஐயனாா் கோயில் தெரு பகுதியில் இரு குழந்தைகளுடன் வசிக்கின்றனா்.
இத் தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். அதுபோல, வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் இருந்த காவ்யா சனிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அஸ்வின் அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.