Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
தீவனம் அருந்தி 2 மாடுகள், 2 ஆடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
தம்மம்பட்டி அருகே தீவனம் அருந்திய 2 மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தம்மம்பட்டி அருகே மண்மலை எட்டிக்குட்டையைச் சோ்ந்த சுந்தரராஜன் (55) தனது தோட்டத்தில் மாடுகள், ஆடுகள், குதிரைகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல மாட்டுத்தொட்டியில் இருந்த தீவனத்தை சாப்பிட்ட 2 ஆடுகளும், 2 மாடுகளும் அடுத்த அரைமணி நேரத்தில் உயிரிழந்தன.
இதுகுறித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் சுந்தரராஜன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, உயிரிழந்த கால்நடைகளை மருத்துவக் குழுவினா் உடல்கூறாய்வு செய்தனா். மேலும், தீவனத்தை பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

