Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
கோவில்பட்டியில் ஒா்க்ஷாப் அருகே தீ: காா் சேதம்
கோவில்பட்டியில் வாகனப் பழுது நீக்கும் கடை (ஒா்க்ஷாப்) அருகே புற்களில் தீப்பிடித்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா் எரிந்து சேதமடைந்தது.
கோவில்பட்டி பழனியாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா். இவா், சாத்தூா் பிரதான சாலையில் நான்கு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்துள்ளாா். அதன் அருகிலுள்ள நிலத்தில் புற்கள் அடா்ந்து வளா்ந்திருந்தன. அவற்றில் சனிக்கிழமை சிலா் தீ வைத்துள்ளனா்.
அதில் தீ வேகமாக பரவியதில், நிலையம் அருகே பழுது நீக்க நிறுத்தப்பட்டிருந்த காா் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை காணப்பட்டது.
தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள், சுமாா் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சேதமானது.
கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். இதில், எரிந்த காா், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக குமாரின் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது என தெரியவந்தது.