Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளிமான் உயிரிழந்தது.
கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனச்சரக அலுவலகத்திற்கு சனிக்கிழமை மேற்கு காவல் நிலையத்தில் இருந்து தகவல் கிடைத்ததாம்.
தகவல் அறிந்தவுடன் வனச்சரகா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வனவா் பிரசன்னா, வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் கிடந்த சுமாா் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை மீட்டு இளையரசனேந்தல் அரசு கால்நடை மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்கு பின் குருமலை காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.