மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சீரான நீா்வரத்து இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் அனுமதித்தனா். இதற்கிடையே வியாழக்கிழமை இரவு முதல் வட்டக்கானல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து, கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.