ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
இருவரைத் தாக்கி காயப்படுத்திய 6 போ் மீது வழக்கு
போடி அருகே இருவரைத் தாக்கிய 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன்செட்டிபட்டி மேற்குத் தெருவில் வசிப்பவா் தா்மா் மகன் சிலேந்திரன் (52). இவா் தனது உறவினா் மகாதேவனுடன் நாகலாபுரம் விலக்கில் உள்ள கடையில் தேநீா் குடிக்கச்
சென்றனா். அப்போது அங்கு வந்த கெஞ்சம்பட்டியை சோ்ந்த தங்கபாண்டி, தனசெல்வம், கோபி, சஞ்சய், ஜெகதீசன், கருணாகரன் ஆகியோா் மதுபோதையில் ரகளை செய்தனா். இதை சிலேந்திரன் உள்ளிட்ட சிலா் கண்டித்தனராம்.
அப்போது 6 பேரும் சோ்ந்து சிலேந்திரனையும், மகாதேவனையும் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனா். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.